உக்ரைனை தொடர்ந்து ஜப்பானை சீண்டும் ரஷ்யா!
ரஷ்யா-ஜப்பான் இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கும் தீவில் ரஷ்ய படைகள் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருவதால் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
குரில் தீவில் 3,000 துருப்புகள் மற்றும் நூற்றுகணக்கான ராணுவ உபகரணங்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருவதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
ஆனால், தீவில் எந்த பகுதியில் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்ற விவரத்தை ரஷ்ய வெளியிடவில்லை.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் யூனியன் கைப்பற்றிய பிரதேசத்தில் ரஷ்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், அது தங்களுடைய பிரதேசம் என ஜப்பான உரிமை கோரி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே 70 ஆண்டுகளுக்கும் மேலான சர்ச்சைக்கு உட்பட்ட பிரதேசங்களாக நான்கு தீவுகள் இருக்கிறது.
ரஷ்யாவின் தேவையை ஜெர்மன் விரைவில் கைவிடும்: Olaf Scholz அதிரடி!
இந்த நான்கு தீவுகளை தெற்கு குரில்ஸ் என்று ரஷ்யா அழைக்கிறது மற்றும் ஜப்பான் வடக்குப் பிரதேசங்கள் என்று அழைக்கிறது.
இந்த பிரச்னையின் காரணமாக, ரஷ்யாவும் ஜப்பானும் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.
இந்த வார தொடக்கத்தில், உக்ரைன் படையெடுப்பிற்கு எதிராக ரஷ்யா மீதான ஜப்பானின் கடுமையான பொருளாதார தடைகள் காரணமாக, ஜப்பானுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக ரஷ்யா கூறியது.
சமாதானப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியதற்காகவும், தீவுகள் தொடர்பான கூட்டுப் பொருளாதாரத் திட்டங்களை நிறுத்தியதற்காகவும் ரஷ்யாவை ஜப்பான் முன்னதாகக் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய தீவில் தற்போது ரஷ்யா ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருவதால் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.