ஐபிஎல் சட்டவிரோத ஒளிபரப்பு! நடிகை தமன்னா நேரில் ஆஜராக சைபர் பொலிஸார் சம்மன்
ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக நேரலை செய்தது தொடர்பில் சைபர் கிரைம் பொலிஸார் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை பல்வேறு நிறுவனங்கள் வைத்துள்ளன.
Viacom நிறுவனம் தங்களது ஜியோ சினிமா செயலியில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பி வருகிறது.
ஆனால், Fairplay என்கிற செயலியில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நேரலை செய்யப்பட்டன. இதுதொடர்பில் Viacom வழக்கு தொடர்ந்த நிலையில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நடிகை தமன்னாவும் இவ்வழக்கில் சிக்கியுள்ளார். அவர் Fairplay செயலியை விளம்பரப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக அவரிடம் விசாரணை நடத்த முடிவெடுத்த மும்பை சைபர் கிரைம் பொலிஸார், தமன்னாவுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
வரும் 29ஆம் திகதி தமன்னா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இதே வழக்கு தொடர்பில் இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |