13,000 வீடுகளை சூறையாடிய மோக்கா புயல்! பலர் படுகாயம்
வங்க கடலில் உருவான மோக்கா புயல் தீவிரமடைந்ததில், வங்கதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் பகுதிகள் பாதிக்கபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
மோக்கா புயல்
வங்க கடலில் உருவான மோக்கா புயல்(mocha cyclone) மிகவும் தீவிரமடைந்து, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகர்ந்து, வங்க தேசம் மற்றும் மியான்மரில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
@bbc
இந்நிலையில் நேற்று வங்க தேசத்தின் டெக்னாஃப் பகுதியில் புயல் கரையை கடந்ததால், மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக டெக்னாஃப் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த புயலால் டெக்னாஃப் மற்றும் செயிண்ட் மார்ட்டின்ஸ் தீவு மற்றும் இதர கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு செயிண்ட் மார்ட்டின்ஸ் தீவில் கனமழை பொழிந்துள்ளது.
சக்தி வாய்ந்த புயல்
இந்நிலையில் காக்ஸில் பசாரில் ஏற்பட்ட புயல் காரணமாக, 13000 வீடுகள் சேதமடைந்திருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பிறகு வங்க தேசத்தை தாக்கிய சக்தி வாய்ந்த புயலாக மோக்கா புயல் இருக்குமென அந்நாட்டின் தலைமை வானிலை ஆய்வாளர் அசீஸீர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Cyclonic Storm “Mocha” weakened into a depression over Myanmar. The system is likely to weaken into well marked Low Pressure Area during next few hours. pic.twitter.com/hXEHaMOl5C
— India Meteorological Department (@Indiametdept) May 15, 2023
இதனை தொடர்ந்து மியான்மரை நோக்கி நகர்ந்த புயல், மணிக்கு சுமார் 209 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக, மியான்மர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
@bbc
சிட்வியிலுள்ள தாழ்வான பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, அங்குள்ள 20000க்கும் மேற்பட்டவர்கள் மடங்கள் மற்றும் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
@bbc
மோச்சா புயலால் மியான்மரில் இதுவரை மூன்று பேர் பலியாகியிருப்பதாக, அந்நாட்டு ஊடகமான அசோசியேட் பிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பேரிடர் நடைபெற்ற பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.