பிரபல பாடகியிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட ரசிகர்: அடுத்த நடந்த அதிரடி
பிரபல பாடகி ஒருவர் தனது திரைப்பட வெளியீட்டு விழாவுக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

அப்போது அவரிடம் ஒரு ரசிகர் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட நிலையில், அடுத்து நடந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை!
முரட்டுத்தனமாக நடந்துகொண்ட ரசிகர்
பிரபல பொப்பிசைப் பாடகியும் நடிகையுமான அரியானா கிராண்டே (Ariana Grande, 31), கடந்த வியாழனன்று, Wicked: For Good என்னும் தனது புதிய திரைப்படத்தின் வெளியீட்டு விழாவுக்காக தனது சக நடிகர் நடிகைகளுடன் சிங்கப்பூர் சென்றிருந்தார்.

அவர் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டும் இருக்க, திடீரென ஒருவர் பாதுகாப்புக்காக ஏற்படுத்தியிருந்த தடுப்பை தாண்டிக் குதித்து, அரியானாவிடம் ஓடி, அவரது தோளில் கைபோட்டுக்கொண்டு மேலும் கீழுமாக குதிக்க ஆரம்பித்தார்.
y'all need to BEHAVE, this is crazy and ariana was probably scared as hell pic.twitter.com/kfhIPROPlD
— arianators wildin (@arianatorswildt) November 13, 2025
அதை சற்றும் எதிர்பாராத அரியானா அதிர்ச்சியடைந்தார், திகைப்பில் நடுநடுங்கிப்போனார்.
அடுத்த நடந்த அதிரடி
பாதுகாவலர்களும் இப்படி ஒரு விடயத்தை எதிர்பாராததால், அவர்களாலும் அந்த நபரைத் தடுக்க முடியவில்லை.
ஆனால், அதற்குள் ஒரு அதிரடி நடந்தது. ஆம், அரியானாவின் சக நடிகையான சிந்தியா (Cynthia Erivo), உடனடியாக அந்த நபரைப் பிடித்து பலமாக தள்ளிவிட்டார்.
அத்துடன், அரியானாவை சுற்றி தனது கைகளால் பாதுகாப்பு வளையமும் ஏற்படுத்திக்கொண்டார் சிந்தியா.
அதற்குப் பிறகுதான் பாதுகாவலர்கள் வந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தார்கள்.
சிந்தியா ஒரு கணம் கூட யோசிக்காமல் தன் சக நடிகையை பாதுகாக்க செய்த செயலை இணையம் வாயார வாழ்த்துகிறது.

பதுகாவலர்கள் கூட அவ்வளவு விரைவாக செயல்படவில்லை, அவ்வளவு அருமையாக செயல்பட்டார் சிந்தியா என்கிறார் ஒருவர்.

இப்படி ஒரு தோழி கிடைக்க கொடுத்துவைத்திருக்கவேண்டுமென மற்றொருவர் கூற, அதே நேரத்தில், பாதுகாவலர்கள் இன்னமும் கவனமாக இருந்திருக்கவேண்டும், இப்படி ஒரு நிலை அரியானாவுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடாது, சிந்தியாவுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடாது என்கிறார்கள் மற்றவர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |