1 மில்லியன் டொலருக்கு பிட்காயின் வாங்கிய மத்திய வங்கி - சோதனை முயற்சியில் செக் குடியரசு
செக் குடியரசின் மத்திய வங்கி, சோதனை முயற்சியாக 1 மில்லியன் டொலருக்கு பிட்காயின் வாங்கியுள்ளது.
செக் மத்திய வங்கி (Czech National Bank - CNB) தனது நிதி சந்தை அனுபவத்தை விரிவுபடுத்தும் நோக்கில், 1 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் மற்றும் பிற பிளாக்செயின் அடிப்படையிலான டிஜிட்டல் சொத்துகளை வாங்கியுள்ளது.
இந்த முதலீடு, வங்கியின் சர்வதேச கையிருப்பு நிதியில் சேர்க்கப்படாமல், தனித்துவமான சோதனைப் போர்ட்ஃபோலியோவாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலும் பிட்காயின், அமெரிக்க டொலர் அடிப்படையிலான ஸ்டேபிள்காயின்கள் (Stable coins) மற்றும் டோக்கன்கள் உள்ளன.

வங்கி வெளியிட்ட அறிக்கையில், “டிஜிட்டல் சொத்துகளை வாங்குதல், வைத்திருத்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான முழு செயல்முறையையும் சோதனை செய்யும் முயற்சிதான் இது. தொழில்நுட்ப நிர்வாகம், பாதுகாப்பு, AML (Anti-Money Laundering) இணக்கம் போன்றவை அனைத்தும் பரிசோதிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
CNB ஆளுநர் அலெஸ் மிச்சல், “எதிர்காலத்தில், செக் கொருணாவை (Crown) பயன்படுத்தி டோக்கன்களாகிய பத்திரங்கள், முதலீடுகள், அன்றாட பரிவர்த்தனைகள் அனைத்தையும் எளிதாக செய்ய முடியும். அதற்கான பாதையை சோதனை செய்வதே எங்கள் நோக்கம்” என கூறியுள்ளார்.
இந்த போர்ட்ஃபோலியோ, விலை மாற்றங்களால் மாறக்கூடும். மேலும், வங்கி பிற டிஜிட்டல் சொத்துகளையும் சோதனைக்காக வாங்கலாம்.
ஆனால், பிட்காயினை அதிகாரப்பூர்வ கையிருப்பு நிதியில் சேர்க்கும் திட்டம் தற்போது இல்லை. ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) தலைவர் கிரிஸ்டின் லகார்ட், “பிட்காயின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரின் கையிருப்பு சொத்தாக மாறாது” என முன்பு தெரிவித்திருந்தார்.
செக் வங்கி, சட்டப்படி ETF வழியாக பிட்காயினில் முதலீடு செய்யலாம் என்றாலும், அதன் குறுகிய வரலாறு மற்றும் அதிக அபாயம் காரணமாக, தற்போது அதனைத் தவிர்த்துள்ளது.
இந்த முயற்சி, மத்திய வங்கிகள் டிஜிட்டல் சொத்துகளை எவ்வாறு அணுகுகின்றன என்பதற்கான முக்கியமான சோதனை முயற்சியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Czech central bank Bitcoin purchase, CNB crypto assets testing 2025, Czech National Bank 1M USD Bitcoin, Stablecoins tokenised deposits Czech bank, Ales Michl Bitcoin experiment, Czech crypto regulation EU compliance, Bitcoin reserves debate ECB Lagarde, Czech crown tokenised bonds future, Central banks digital assets testing, Cryptocurrency adoption Europe 2025