செக் குடியரசில் விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகாப்டர்: 5 வீரர்களில் ஒருவர் உயிரிழப்பு
செக் குடியரசின் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஹெலிகாப்டர் விபத்து
செக் குடியரசு நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமான UH 1Y Venom ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் 3 பேர் வரை காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தானது புதன்கிழமை பிரேக் நகருக்கு தென் கிழக்கே சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் நேமெஸ்ட் நாட் ஒஸ்லாவோ என்ற பகுதியில் அமைந்துள்ள 22 வது விமானப்படை தளத்தில் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக செக் குடியரசு ராணுவம் தங்களுடைய X பக்கத்தில் வெளியிட்ட தகவலில், ஹெலிகாப்டர் விபத்தின் போது விமானத்தில் 5 ராணுவ வீரர்கள் வரை இருந்ததாகவும், விபத்துக்கு பிறகு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் மற்றும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை செக் ராணுவம் இதுவரை வெளியிடவில்லை.
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் பெல் டெக்ட்ரான் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட UH 1Y Venom ரக பல்துறை ஹெலிகாப்டர் ஆகும்.
இந்த ஹெலிகாப்டர் 2 ஜெனரல் எலெக்ட்ரிக் T700-GE-401C இன்ஜின்கள் மூலம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |