உலக அழகிப் பட்டத்தை வென்ற அறக்கட்டளை நிறுவனர்! வியக்க வைக்கும் அவரது சேவை
செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோ 71வது உலக அழகிப் பட்டத்தை வென்றார்.
71வது உலக அழகிப்போட்டி
இந்தியாவின் மும்பை நகரில் 71வது உலக அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியா, மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, செக் குடியரசு, இந்தோனேசியா, ஹங்கேரி உள்ளிட்ட 117 நாடுகளைச் சேர்ந்த இளம்பெண்கள் கலந்துகொண்டனர்.
இறுதிப்போட்டிக்கு 14 பேர் தகுதி பெற்றனர். அதில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 25 வயது கிறிஸ்டினா பிஸ்கோ (Krystyna Pyszkova) அழகிப் பட்டத்தை வென்றார்.
சட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் இரட்டை பட்டம் பெற்ற பிஸ்கோ, ஒரு மொடலாக இருந்தாலும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி
இது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மனநல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கல்வித் திட்டங்களை வழங்குகிறது.
அதேபோல் தான்சானியா நாட்டில் பின்தங்கிய குழந்தைகளுக்காக ஆங்கிலப் பாடசாலையையும் நிறுவியுள்ளார்.
தனது நாட்டிற்காக இரண்டாவது முறையாக அழகிப் பட்டத்தை பெற்றுத் தந்த கிறிஸ்டினா பிஸ்கோ ஆங்கிலம், போலிஷ், ஸ்லோவாக் மற்றும் ஜேர்மனிய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |