தலித் சிறுவனை அடித்து, கால்களை நக்க வைத்த சம்பவம்: வெளியான வீடியோ ஆதாரம்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் சாதிய அடிப்படையிலான வன்முறை சம்பவத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் தாக்கப்பட்டு, இன்னொரு இளைஞரின் கால்களை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் ஏப்ரல் 10-ஆம் திகதி இந்த சம்பவம் நடந்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் எழுத்துப்பூர்வ புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
இந்த சம்பவத்தில் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வைரலான அந்த வீடியோவில், மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த மற்றோரு இளைஞரின் கால்களை, தரையில் பயத்துடன் அமர்ந்திருந்த தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவன் கட்டாயப்படுத்தி நக்கவைக்கப்படுவது பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனை 'தாகூர்' என்ற பெயரை உச்சரித்து துஷ்பிரயோகம் செய்கினறனர். "இனி அப்படி ஒரு தப்பு செய்வீர்களா?" சிறுவனை மிரட்டி கேட்கின்றனர். இந்த தாக்குதல் வீடியோ வைரலானதையடுத்து, 7 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
#Update The boy's father had died 10 years ago, his mother works as a laborer to educate her son and family, The family is very poor, they are scared.
— The Dalit Voice (@ambedkariteIND) April 19, 2022
Raibareli police have arrested six people including accused Hrithik Singh.#DalitLivesMatter pic.twitter.com/8rsEJhL9ZO
பாதிக்கப்பட்ட சிறுவனின் எழுத்துப்பூர்வ புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் உயர் சாதியினர் என்று அழைக்கப்படுபவர்கள் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் 10-ம் வகுப்பு மாணவர் என்றும், அவர் தனது விதவை தாயுடன் வசித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
சிறுவனின் தாய் குற்றம் சாட்டப்பட்ட சிலரின் வயல்களில் வேலை செய்ததாகவும், அந்த சிறுவன் அவர்களிடம் அந்த வேலைக்கு பணம் கேட்டதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோபமடைந்த குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவனைப் பிடித்து, துஷ்பிரயோகம் செய்து, தாக்கி, கால்களை நக்க வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் இந்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்று தவளைகள் தெரிவிக்கின்றன.
Laxmanpur police station is of Jagatpur district Rae Bareli.The feudalists are abusing the Dalit boy and licking his feet with his tongue. If the administration sends him to jail immediately, he will be bound for a violent agitation.@Uppolice @RahulGandhihttps://t.co/yeev8ZhONx pic.twitter.com/fgWVtvhzK8
— Anwar Hussian.A (@AnwarHussianA1) April 19, 2022