WBBL தொடர்ச்சியாக 4வது வெற்றி! கெத்து காட்டும் மகளிர்படை
மகளிர் பிக் பாஷ் 2025 போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.
அமன்டா அதிரடி
ஹோபர்ட் ஹரிகேன்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான WBBL போட்டி பெல்லெரிவ் ஓவல் மைதானத்தில் நடந்தது.
Lizelle Lee is on her way after a big early wicket from Darcie Brown! 💥 #WBBL11 pic.twitter.com/eJFzzYKasD
— Weber Women's Big Bash League (@WBBL) November 18, 2025
முதலில் ஆடிய அடிலெய்டு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்தது. அமன்டா-ஜெட் வெல்லிங்டன் 21 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டேனியெல்லே அபாரம்
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனியெல்லே வைட்-ஹாட்ஜ் (Danielle Wyatt-Hodge), ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசினார்.
டெர்சி பிரவுன் 16 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அமன்டா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஹோபர்ட் அணியின் 4வது வெற்றி இதுவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |