பிள்ளைகளை புறக்கணித்தார்கள்: ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறும் இன்னொரு தம்பதி
டென்மார்க் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறி, இனி அமெரிக்காவில் குடியேற இருப்பதாக இளவரசர் ஜோகிம் மற்றும் மேரி தம்பதி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ குடும்பத்து பட்டங்கள் பறிப்பு
தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த ராஜ குடும்பத்து பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இளவரசர் ஜோகிம் தரப்பில் கூறப்படுகிறது.
@reuters
டென்மார்க் ராஜ குடும்பத்தில் முடிசூடும் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் 53 வயதான இளவரசர் ஜோகிம், வாஷிங்டனில் அமைந்துள்ள டென்மார்க் தூதரகத்தில் பாதுகாப்புத் துறை சார்ந்த முக்கிய அதிகாரியாக பணியாற்றுவார் என்றே கூறப்படுகிறது.
டென்மார்க் ராணியார் இரண்டாவது மார்கிரேத்தின் இளைய மகன் இந்த இளவரசர் ஜோகிம். கடந்த செப்டம்பர் மாதம் இளவரசர் ஜோகிமின் நான்கு பிள்ளைகளின் இளவரசர் பட்டத்தை ராணியார் மார்கிரேத் அதிரடியாக பறித்துள்ளார்.
@getty
இந்த நிலையிலேயே, டென்மார்க் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறும் முடிவுக்கு இளவரசர் ஜோகிம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் டென்மார்க் நாட்டுக்காக சர்வதேச அரங்கில் பணியாற்றும் வாய்ப்பு அமைந்துள்ளதை தாம் பெருமையாக கருதுவதாக இளவரசர் ஜோகிம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டென்மார்க் ராஜ குடும்பத்திற்கும் இளவரசர் ஜோகிம் இடையே கடுமையான கருத்து மோதல் வெடித்தது. தமது நான்கு பிள்ளைகளின் இளவரசர் பட்டம் ராணியாரால் பறிக்கப்பட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ராணியார் மார்கிரேத் அறிக்கை
ஆனால், அப்படியான ஒரு முடிவை மேற்கொண்டு குடும்ப உறுப்பினர்களை மனம் வாட செய்தமைக்கு தாம் மன்னிப்பு கோருவதாக ராணியார் மார்கிரேத் அறிக்கை ஒன்றால் வெளிப்படுத்தியிருந்தார்.
@reuters
இருப்பினும், பட்டங்களை பறித்துள்ள தமது முடிவுக்கு எந்த மாற்றமும் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இளவரசர் அல்லது இளவரசி பட்டத்தை பறித்ததன் மூலமாக, ராஜ குடும்பத்து சிறார்கள் சாதாரண வாழ்க்கை வாழ பழக முடியும் என்றே டென்மார்க் ராஜ குடும்பம் விளக்கமளித்திருந்தது.