கடைசி 5 ஓவர்களில் 50 ரன்! இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 300 ஓட்டங்கள் குவித்தது.
கான்வே, நிக்கோல்ஸ் அரைசதம் விளாசல்
வதோதராவில் நடந்து வரும் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
ESPNcricinfo/X
டெவோன் கான்வே (Devon Conway), ஹென்றி நிக்கோல்ஸ் (Henry Nicholls) இருவரும் அதிரடியாக முதல் விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள் குவித்தனர்.
நிக்கோல்ஸ் 69 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ராணா ஓவரில் அவுட் ஆனார். அடுத்து 56 ஓட்டங்களில் இருந்த கான்வே ஆட்டமிழக்க, வில் யங் 12 ஓட்டங்களில் வெளியேறினார்.
எனினும் நிலைத்து நின்று ஆடிய டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.
மிட்செல் மிரட்டல்
அவருடன் கிறிஸ்டியன் கிளார்க்கும் கைகோர்க்க, நியூசிலாந்தின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மிட்செல் 71 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
கிளார்க் 24 (17) ஓட்டங்கள் விளாச, நியூசிலாந்து 300 ஓட்டங்கள் குவித்தது. மொஹம்மது சிராஜ், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
45 ஓவர்களில் 250 ஓட்டங்கள் எடுத்திருந்த நியூசிலாந்து, கடைசி 5 ஓவர்களில் 50 ஓட்டங்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
BCCI/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |