தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மாமியார், மருமகள்! குவியும் வாழ்த்துக்கள்
விருதுநகர் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியார், மருமகள் இருவரும் வெற்றி பெற்றுள்ளதையடுத்து பயங்கர வைரலாகி வருகின்றனர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் நகராட்சி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் என இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த வார்டுகளில் போட்டியிட்டுயுள்ளனர். விருதுநகர் நகர வார்டில் மாமியார் பேபி காளிராஜ் மற்றும் 26வது வார்டில் மருமகள் சித்ரேஸ்வரி போட்டியிட்டனர்.
இதில் பேபி காளிராஜ் ஏற்கனவே இருமுறை வார்டு கவுன்சிலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மருமகள் சித்ரேஸ்வரி முதல் முறையாக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
விருதுநகர் நகர்மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார்-மருமகள் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.இதையடுத்து இரண்டு பேருக்கும் பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.