பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸில் அடைத்த மகள்: பதறவைக்கும் சம்பவம்
பெங்களூருவில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸில் அடைத்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த மகளால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
காவல் நிலையத்திற்கு சூட்கேசுடன் வந்த பெண்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் செனாலி சென். இவர் பெங்களூருவில் பிசியோதெரபிஸ்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு இரவு ஒரு சூட்கேசுடன் வந்தார்.
அப்போது, போலீசார் நீங்கள் யார் என்று கேட்டதற்கு செலிமா சென் எதுவும் பேசாமல் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது எழுந்து வந்த காவலர்களிடம் அப்பெண், கையில் கொண்டு வந்த சூட்கேசை திறந்து காட்டினார்.
அப்போது, சூட்கேஸில் ரத்தம் சொட்ட சொட்ட 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. இதைப் பார்த்ததும் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். பொலிசாரிடம் செலிமா சென் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.
தாயை கொடூரமாக கொலை செய்த மகள்
அப்போது அவர் பேசுகையில், பிலேகஹல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நானும், என் தாயும் வசித்து வந்தோம். என் அத்தையுடன் என் அம்மா சண்டையிட்டு வந்தார். என்னிடம் என் அம்மா தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று என்னை மிரட்டி வந்தார். இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளேன். மீண்டும், மீண்டும் அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர்.
மீண்டும் என் அம்மா என்னை மிரட்டினார். இதனால், ஆத்திரமடைந்த நான் என் அம்மாவிற்கு தூக்கமாத்திரை கொடுத்து கழுத்தை நெறுக்கி கொலை செய்தேன். பின்னர், உடலை சூட்கேஸில் அடைத்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தேன் என்று கூறினார்.
இதனையடுத்து, உயிரிழந்த தாயின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து செலிமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.