பிக்சட் டெபாசிட் பணத்தைக் கொடுக்க மறுத்த மகள்: பெற்றோர் செய்த பயங்கர செயல்
கடந்த வாரம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பெண்ணின் சகோதாரர் அது தற்கொலை அல்ல, கொலை என பொலிசில் புகாரளித்துள்ளதைத் தொடர்ந்து பரபரப்பு உருவாகியுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்
கடந்த சனிக்கிழமையன்று, அதாவது, ஜனவரி மாதம் 13ஆம் திகதி, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள Ramgarh எனுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில், குஷி குமாரி ( Khushi Kumari, 17) என்னும் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கபட்டார்.
குஷி, தனது பிக்சட் டெபாசிட் சேமிப்பில் 6 லட்ச ரூபாய் சேமித்துவைத்துள்ளார். அந்த தொகை, விரைவில் முதிர்வடைய உள்ளது.
இந்நிலையில், தனது தந்தையும், சித்தியும் சேர்ந்து தன் சகோதரியைக் கொன்றுவிட்டதாக குஷியின் சகோதரர் பொலிசில் புகாரளித்துள்ளார்.
பிக்சட் டெபாசிட் பணத்தை குஷி அவர்களுடன் பகிர்ந்துகொள்ள மறுத்ததால் அவர்கள் குஷியைக் கொன்று கயிற்றில் தொங்கவிட்டுவிட்டதாக குஷியின் சகோதாரர் பொலிசில் புகாரளித்தார்.
தம்பதி கைது
இந்த சம்பவம் தொடர்பாக, திங்கட்கிழமை, குஷியின் தந்தையான சுனில் (Sunil Mahto) மற்றும் சித்தியான பூனம் தேவி (Punam Devi) ஆகியோரைக் கைது செய்யக்கோரி, அவர்கள் வாழும் கிராமத்தினர் பொலிஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து, குஷியின் தந்தையும் சித்தியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியான பிரேந்திர குமார் சௌத்ரி என்பவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |