இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களின் மகள்கள் - அவர்களுடைய சொத்து?
முகேஷ் அம்பானி, கே.எம்.பிர்லா மற்றும் ஆனந்த் மஹிந்திரா போன்ற இந்திய கோடீஸ்வரர்களை பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் அவர்களுடைய குழந்தைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?
இந்த தொழிலதிபர்களில் சிலர் பெரிய அளவிலான தொண்டு திட்டங்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடைய குழந்தைகள் வெளிவருவதில்லை.
அவர்களின் சந்ததியினர் முன்னணி முதல் உலகப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அதில் முகேஷ் அம்பானியின் பிள்ளைகளான ஆனந்த் அம்பானி, ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி குறித்து அடிக்கடி பல செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். அதன்போது நீங்கள் அவர்கள் குறித்து அறிந்திருக்கலாம்.
ஆனால் இதையும் தவிர்த்து இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களின் மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
இஷா அம்பானி (Isha Ambani)
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனங்களில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். நிறுவனத்தின் டிஜிட்டல் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார்.
அனன்யா பிர்லா (Ananya Birla)
குமார் மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர், இசைக்கலைஞர் மற்றும் மனநல ஆலோசகராக இருந்து வருகிறார்.
ரோஷ்னி நாடார் (Roshni Nadar)
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ஷிவ் நாடாரின் மகள். HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவியாக இருந்து வருகிறார்.
திவ்யா மற்றும் அலிகா மஹிந்திரா (Divya and Aalika Mahindra)
திவ்யா மற்றும் அலிகா மஹிந்திரா ஆனந்த் மஹிந்திராவின் மகள்கள். இவர்கள் சொகுசு ஹோட்டல்களை நிர்வகித்து வருகின்றனர்.
ராக்கி கபூர் டாண்டன் (Rakhee Kapoor Tandon)
ராணா கபூரின் மகள் ராக்கி கபூர் டாண்டன், RAAS கேபிட்டலின் நிறுவனர் மற்றும் நிதி மற்றும் தொழில்முனைவில் குறிப்பிடத்தக்க பின்னணியைக் கொண்டவர்.
ராதா கபூர் (Radha Kapoor)
ராணா கபூரின் மகள் ராதா கபூர். இவர் ரு செல்வாக்கு மிக்க தொழிலதிபர் மற்றும் ISDI மற்றும் DOIT கிரியேஷன்ஸ் நிறுவனராக இருக்கிறார்.
பியா சிங் (Pia Singh)
KP சிங்கின் மகள் பியா சிங். DLF லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு முக்கிய தொழிலதிபர் ஆவார். நிறுவனத்தின் சில்லறை மற்றும் வணிக ரியல் எஸ்டேட் பிரிவுகளில் கவனம் செலுத்துகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |