ஒரே மாதத்தில் முடி வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க வெந்தயமும் வெங்காயமும் போதும்...!
முடி வளர்ச்சி என்பது மயிர்க்கால்கள் புதிய முடியை உருவாக்கும் இயற்கையான செயல்முறையை குறிக்கும்.
ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பராமரிப்பதில் சரியான ஊட்டச்சத்து, நல்ல முடி பராமரிப்பு நடைமுறைகள், உச்சந்தலை சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் தேவைப்படும்.
ஒரு பெண்ணிற்கு தனது முடியை நீளமாகவும் ஆரோக்கியமாகவும் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் போதுமானளவு ஊட்டச்சத்து இல்லையேல் முடியின் வளர்ச்சியானது குறையும். அதற்கு பெரும்பான்மையோர் பரிந்துரைப்பது வீட்டு வைத்தியம் தான்.
வீட்டு வைத்தியத்தின் மூலம் முடியை வளர்ச்சியை தூண்டுவதற்கு நினைத்தால் அது நல்ல பலனை வழங்கும்.
அந்தவகையில் உங்களது வீட்டில் எப்போதும் இருக்கக் கூடிய வெங்காயமும் வெந்தயமும் வைத்து எப்படி தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வெந்தயம் + வெங்காயம் ஹேர் மாஸ்க்
முதலில் வெந்தயத்தை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் அதை அரைத்து பேஸ்ட் செய்யவும்.
அடுத்ததாக வெங்காயத்தை சாற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காய சாற்றுடன் வெந்தய பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
இதை உங்களது உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரத்திற்கு அப்படியே வைக்கவும்.
இறுதியாக தலைமுடியை ஷாம்பு போட்டு கழுவிய பின், முடியை வெற்று நீரில் அலசி கொள்ள வேண்டும்.
வெந்தயம் + வெங்காயம் தலை முடி எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் வெந்தயத்தை சேர்த்து அதில் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஊற்றவும்.
பின் அடுப்பில் வைத்து வெந்தய விதைகள் பழுப்பு நிறமாகும் வரை சூடாக்கவும்.
அடுத்து இதை ஆற வைத்து வடிக்கட்டி எடுத்து, வெங்காய சாற்றை சேர்க்கவும்.
இதை சுத்தமான கண்ணாடி போத்தலில் ஊற்றி பயன்படுத்தலாம்.
நல்ல பலனை பெறுவதற்கு தினமும் முடியில் தடவி மசாஜ் செய்து, இரண்டு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |