நாக்அவுட் போட்டியில் டக்அவுட் ஆன கேப்டன் வார்னர்! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் (வீடியோ)
பிக்பாஷ் லீக் நாக்அவுட் போட்டியில் டேவிட் வார்னர் டக்அவுட் ஆனதால், சிட்னி தண்டர் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நாக்அவுட் போட்டி
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் லீக் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (Hobart Hurricanes) அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
சேலஞ்சஜர் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியுடன் மோதப்போகும் மற்றொரு அணி எது என்பதை முடிவு செய்யும் நாக்அவுட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது.
இதில் டேவிட் வார்னரின் சிட்னி தண்டர் அணியும் (Sydney Thunder), மார்கஸ் ஸ்டோய்னிஸின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் (Melbourne Stars) அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
It's a duck for David Warner!
— KFC Big Bash League (@BBL) January 22, 2025
Tom Curran strikes in the first over for the @StarsBBL. #BBL14 pic.twitter.com/V4yqLuAl3b
வார்னர் ஏமாற்றம்
நாணய சுழற்சியில் வென்ற மெல்போர்ன் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, சிட்னி தண்டர் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய அணித்தலைவர் டேவிட் வார்னர் (David Warner) இரண்டாவது பந்திலேயே டாம் கரண் பந்துவீச்சில் ஸ்டோய்னிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரது இந்த விக்கெட் மெல்போர்ன் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்தாலும், தண்டர் அணி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |