தீ விபத்தில் இறந்ததாக பொலிஸாரை நம்ப வைத்து விட்டு சிறையிலிருந்து தப்பிய கைதி! அம்பலமான உண்மைகள்
தென் ஆப்பிரிக்காவில் பொலிஸாரை சிறையில் எரித்து விட்டு, தப்பிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறையிலிருந்து தப்பிய கைதி
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தாபோ பெஸ்டெர் (thabo bester) என்ற நபர், கடந்த 2012ஆம் ஆண்டு இரண்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், அதில் ஒரு பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காகவும், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
@cnn
இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிறை கைதியான தாபோ பெஸ்டெர் உடல் எரிந்து இறந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
கடந்த மாதம் தாபோ பெஸ்டெரை அவரது காதலியோடு ஹொட்டலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு விரைந்து சென்ற பொலிஸார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் தெரிய வந்த உண்மை
கடந்த 2022 ஆம் ஆண்டு சிறையில் உயிரிழந்ததாக நம்ப வைத்துவிட்டு தப்பிய தாபோ பெஸ்டெரை, காவல்துறை விசாரணை நடத்தியது.
அதில் அவர் இறந்த பொலிஸார் ஒருவரை சிறையில் வைத்து எரித்ததாகவும், அதை தீ விபத்து போல சித்தரித்துவிட்டு சிறையிலிருந்து தப்பியதாகவும், தாபோ பெஸ்டெர் வாக்குமூலம் கொடுத்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
@gettyimages
மேலும் தீ விபத்தில் எரிந்த உடலை DNA பரிசோதனை செய்ய முடியாமல் போனதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொலையில் மர்மம்
இறந்த பொலிஸாரின் தந்தை மாப்லோ என்பவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் “ஓராண்டுக்கு முன் என் மகன் கட்லெகோ பெரெங் மாப்லோ(Katlego Bereng Mpholo) காணாமல் போன போது, பொலிஸார் அவர் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறினர்”
@facebook
”ஆனால் இன்று வரை எனது மகனது உடலை பொலிஸார் காட்டவில்லை. நாங்களும் பல பிணவறைக்கு சென்று விட்டோம். இன்று வரை எங்களது மகனது உடலை நாங்கள் அடையாளம் காண முடியவில்லை. எனவே இதில் ஏதோ மர்மம் இருப்பதாக எங்களுக்கு தோன்றுகிறது” என மாப்லோ கூறியுள்ளார்.
நீதிக்கு போராடும் தந்தை
தாபோ பெஸ்டெர் பணியிலிருந்த தனது மகனை கொலை செய்து, பின்னர் அவரது உடலை எரித்துவிட்டு தப்பியிருக்கலாம் என சந்தேகப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் சிறையிலிருந்த தாபோ எப்படி பிணவறையிலிருந்த தன் மகனது உடலை எடுத்து சென்றிருக்க முடியும் என பொலிஸாரை கேள்வி எழுப்பியுள்ளார்.
@gettyimages
“தாபோ பெஸ்டெரால் எரிக்கப்பட்ட உடல் என் மகனுடையது. இந்த அரசாங்கம் எங்களை ஏமாற்றி விட்டது. நான் மனமுடைந்து விட்டேன்” என இறந்த பொலிஸாரின் தந்தை மாப்லோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.