இறந்து பிறந்த குழந்தை... அடக்கம் செய்யும் நேரத்தில் நிகழ்ந்த அதிசயம்
இந்தியாவில் அசாமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், குழந்தை உயிருடன் இருப்பதை பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர் இந்த சம்பவமானது அப்பகுதியில் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது.
இறந்து பிறந்த குழந்தை
29 வயதான ரத்தன் தாஸ், தனது ஆறு மாத கர்ப்பிணி மனைவியை செவ்வாய்க்கிழமை மாலை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவளுடைய கர்ப்பம் சவாலுடையதாக இருக்கும் என வைத்தியர்கள் கூறிய நிலையில், குழந்தை அல்லது தாயை தான் காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே பிரசவம் செய்யவும் அனுமதித்துள்ளார்கள். என் மனைவிக்கு இறந்த குழந்தை பிறந்ததாக என்னிடம் வைத்தியர்கள் கூறினார்கள். குழந்தையின் உடலையும், இறப்புச் சான்றிதழையும் என்னிடம் கொடுத்தார்கள்.
பின் தாஸ் மற்றும் அவரது மனைவி சில்சார் சுடுகாட்டிற்கு வந்து தகனத்திற்காக உடல் இருந்த பெட்டியை திறந்த போது, குழந்தை கண்விழித்து அழுதுள்ளது.
ஆகவே குழந்தை உடனே வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றார்கள். இந்த சம்பவம் தெரிந்த உடனே பகுதியில் இருக்கும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்னிலையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இது போன்ற விடயம் இந்தியாவில் நடப்பது புதிது அல்ல. கடந்த பிப்ரவரி மாதத்தில் இறந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்ட பிறந்த குழந்தை இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிறந்த குழந்தையை சேர்க்க குடும்பத்தினர் மீண்டும் மருத்துவமனையை அணுகியபோது, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.
இவ்வாறு பல சம்பவங்கள் இந்தியாவில் நடந்துக்கொண்டே தான் இருகின்றது. இதற்கான காரணம் குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |