வரலாற்றில் மிக மோசமான விபத்து! 37 பேர் பலியான சோகம்.. மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்
பெரு நாட்டில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 37 பேர் பலியாகினர்.
பாரிய விபத்து
தென் அமெரிக்க நாடான பெருவின் தெற்கு அரேக்விபா பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தும், Pickup லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதின.
இதில் பேருந்து 200 மீற்றர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து பாரிய விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது 37 பேர் வரை உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திலேயே
அதிகாரிகள் கூறும்போது 36 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் 8 மாத குழந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 26 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
பெரு வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக மோசமான பேருந்து விபத்துகளில் இதுவும் ஒன்று என்கின்றனர் அதிகாரிகள். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |