உக்கிர தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்... ஜபாலியா முகாமில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கானோர்
காஸாவில் ஜபாலியா முகாம் அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது
ஹமாஸ் படைகள் மீண்டும் ஒருங்கிணைவதை தடுக்கும் நோக்கமாகக் கொண்ட இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்துவரும் தாக்குதல்களால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் குறைந்தது 20 பாலஸ்தீனியர்கள் ஜபாலியாவில் கொல்லப்பட்டனர்.
அத்துடன் டசின் கணக்கானவர்கள் காயங்கலுடன் தப்பியுள்ளனர். ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 61 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
வீட்டில் இருந்த 20 பேர்கள் கொல்லப்பட்டது உட்பட கிட்டத்தட்ட பாதி இறப்புகள் ஜபாலியாவில் நடந்துள்ளன. ஆனால் ஜபாலியாவில் கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகள் என்றே இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
வெளியேற முயற்சிப்பவர்கள்
இறந்தவர்களில் எத்தனை பேர் ஹமாஸ் படையை சேர்ந்தவர்கள் அல்லது பொதுமக்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த நிலையில், ஜபாலியா முகாம்களில் இருந்து எவரையும் வெளியேற இஸ்ரேல் ராணுவம் அனுமதிப்பதில்லை என்றும், வெளியேற முயற்சிப்பவர்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள தகவலில், ஜபாலியா முகாம் பகுதியில் மொத்தம் 400,000 மக்கள் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |