ஐரோப்பாவின் முக்கிய நாடுகளை சூறையாடும் அதிபயங்கர காட்டுத்தீ! தொடர்ந்து மோசமடையும் நிலைமை
ஸ்பெயின், போர்த்துக்கல் முழுவதும் காட்டுத்தீ தொடர்ந்து வருவதால் நிலைமை மோசமடைந்துள்ளது.
மோசமாக பரவும் காட்டுத்தீ
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கலில் காட்டுத்தீ மிக மோசமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக பல கிராமங்களின் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயால் பாரிய அளவில் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது இந்த ஆண்டின் சராசரியை விட நான்கு மடங்கு அதிக என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதுவரை 1 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமானவை எரிந்துள்ளன. இது 2017யில் 988,544 ஹெக்டேர் எரிந்ததை விட அதிகம்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், காலநிலை மாற்றம் மற்றும் மனித நில பயன்பாடு ஆகியவை எப்போதும் இல்லாத அளவுக்கு பாரிய, மிகவும் தீவிரமான காட்டுத்தீக்கு வழிவகுக்கும் நிலைமைகள் என்று கூறியுள்ளனர்.
23 ஆண்டுகளில் இல்லாத
அதே சமயம் இந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்துகளின் அளவு கவலையளிக்கும் வகையில் இருந்தாலும், அது ஆச்சரியமல்ல என்று ஸ்பெயினின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் தீயணைப்பு ஆராய்ச்சியாளரான கிறிஸ்டினா சாண்டின் நுனோ தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு சேவை இந்த ஆண்டு ஸ்பெயினின் காட்டுத்தீ உமிழ்வு 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறியது.
இதற்கிடையில், போர்த்துக்கலின் மிரண்டேலாவில் வேகமாக நகரும் தீப்பிழம்புகளில் இருந்து தப்பிக்க முயன்ற 65 வயது நபர் ஒருவர் மீது புல்டோஸர் மோதியதில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |