பிரித்தானிய கடற்கரையில் ஒதுங்கியுள்ள ஆபத்தான கடல் உயிரினங்கள்- மக்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானிய கடற்கரையில் ஒதுங்கியுள்ள ஆபத்தான கடல் உயிரினங்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் உள்ள பிரபலமான அபெராவன் கடற்கரையில், 'போர்ச்சுகீஸ் மேன் ஓ வார்' (Portuguese Man O' War) எனப்படும் மிகவும் ஆபத்தான கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவை 'Floating Terrors' என அழைக்கப்படும் இந்த உயிரினங்கள், ஜெல்லி மீன்களைப் போன்ற தோற்றம் கொண்ட siphonophore வகையைச் சேர்ந்தவை.

போர்ச்சுகீஸ் மேன் ஓ'வார் உயிருடன் இல்லாத நிலையிலும் அவற்றின் கொடுக்குகள் (tentacles) தீவிர விஷம் கொண்டிருப்பதால், தொட்டாலே கடுமையான வலி, வெடிப்பு, கொப்புளங்கள், காயங்கள், காய்ச்சல், சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்.
சில நேரங்களில், உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்விளைவுகளையும் தூண்டக்கூடும்.
இந்த உயிரினங்கள், தண்ணீரில் மிதந்து செல்லும் தன்மை கொண்டவை. புயல் மற்றும் பலமான காற்றால் கரைக்கு அடிக்கடி ஒதுங்குகின்றன.
Pembrokeshire, Gwynedd மற்றும் Anglesey பகுதிகளிலும் இதற்குமுன் இதேபோன்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
- இந்த உயிரினங்களை (இறந்து கிடந்தாலும்) தொடுவதை தவிர்க்க வேண்டும்
 - விஷம் தாக்கிய இடத்தை கடல் நீரால் கழுவ வேண்டும்
 - தோலில் கொடுக்குகள் இருந்தால், அட்டை போன்ற பொருளால் மெதுவாக அகற்ற வேண்டும்
 - கடுமையான தாக்கம் ஏற்பட்டால், சூடான நீரில் மூழ்கடித்து மருத்துவ உதவி பெற வேண்டும்
 
பிரித்தானிய கடலோர காவல்படை, இந்த உயிரினங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
Portuguese Man O’ War UK beach, Floating Terrors spotted in Wales, venomous sea creatures UK warning, Aberavon Beach jellyfish alert, UK Coastguard marine hazard alert, dangerous siphonophore UK shores, beach safety warning UK 2025, marine stings emergency treatment, UK beachgoers sea creature danger, poisonous tentacles UK coastline