காஸாவில் 48 மணி நேரத்தில் கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை... நடுங்கவைக்கும் தகவல்
வடக்கு காஸாவில் இஸ்ரேல் படைகள் கொடூரத் தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில், ஜபாலியாவில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்
நூற்றுக்கணக்கான மக்கள் உயிருக்கு அஞ்சி, இரண்டு குடியிருப்பு வளாகங்களில் தஞ்சமடைந்திருந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
மட்டுமின்றி, போலியோ தடுப்பூசி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த யுனிசெஃப் ஊழியர் ஒருவரின் தனிப்பட்ட வாகனம் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
அவர் பயணித்த கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக ஊழியருக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால் அந்த ஊழியர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றே தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஷேக் ரத்வானில் உள்ள தடுப்பூசி மருத்துவமனையின் அருகாமையில் மற்றொரு தாக்குதலில் குறைந்தது மூன்று குழந்தைகள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜபாலியாவில் நடந்த தாக்குதல் மற்றும் யுனிசெஃப் ஊழியர் மீதான தாக்குதல் ஆகியவை காஸா பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்களை முன்னெடுத்து வருவதன் சாட்சியங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
மீண்டும் மீண்டும் மீறப்படுகின்றன
போரின் போது குடிமக்கள் மற்றும் குடிமக்கள் கட்டமைப்புகள், குடியிருப்பு கட்டிடங்கள், அத்துடன் மனிதாபிமான பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.
மட்டுமின்றி, இடப்பெயர்வு அல்லது வெளியேற்ற உத்தரவுகள் மோதலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினரும் ஒரு பகுதியில் உள்ள அனைத்து தனிநபர்கள் அல்லது பொருட்களை இராணுவ இலக்குகளாக கருத முடியாது.
இருப்பினும், இந்தக் கோட்பாடுகள் மீண்டும் மீண்டும் மீறப்படுகின்றன, பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் மற்றும் உயிர்வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசிய சேவைகள் மறுக்கப்பட்டுள்ளன என UNICEF நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் கோபத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |