ஆசிய நாடொன்றில் 900ஐ கடந்த பலி எண்ணிக்கை! மேலும் உயரலாம் என அச்சம்
இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900த்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான இயற்கை பேரிடர்
கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகள் கடுமையான இயற்கை பேரிடரை சந்தித்தன. 
குறிப்பாக, இந்தோனேசியா 'சென்யார்' புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டது.
அந்நாட்டின் மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான இந்த புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750ஐ கடந்ததாக செய்தி வெளியானது.
900ஐ கடந்த எண்ணிக்கை
இந்த நிலையில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளது என தெரிய வந்துள்ளது. 
மேலும், 410 பேர் மாயமாகியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை இயற்கை பேரழிவுகளினால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,790 என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |