750 கடந்த இறப்பு எண்ணிக்கை... வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் தெற்காசிய நாடொன்று
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 753 என உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
பலத்த பருவமழை
இதில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 504 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இறப்பு எண்ணிக்கை 604 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வெள்ளத்தால் சுமார் 3.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் 2,600 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியா, இலங்கை மற்றும் தெற்கு தாய்லாந்து உள்ளிட்ட ஆசியாவின் சில பகுதிகளை பலத்த பருவமழை மற்றும் வெப்பமண்டல சூறாவளிகள் பேரழிவிற்கு தள்ளியுள்ளன.
பிராந்தியம் முழுவதும் 1,300க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர், குடியிருப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்து நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்தோனேசியாவில் மட்டும், 3.2 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 2,600 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து ஒரு மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆச்சேவில், சந்தைகளில் அரிசி, காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மலாக்கா ஜலசந்தி
இந்த நிலையில், இந்தோனேசிய அரசாங்கம் திங்களன்று 34,000 டன் அரிசி மற்றும் 6.8 மில்லியன் லிட்டர் சமையல் எண்ணெயை ஆச்சேவிற்கும், வடக்கு சுமத்ரா மற்றும் மேற்கு சுமத்ரா மாகாணங்களுக்கும் அனுப்புவதாகக் கூறியது.

இப்பகுதியில் பருவமழை பெரும்பாலும் கனமழையைக் கொண்டுவரும், இதனால் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வாடிக்கை என்றே பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு பெய்த மழை மலாக்கா ஜலசந்தியில் உருவான ஒரு அரிய வெப்பமண்டல புயலினால் உக்கிரமடைந்தது என்றும் சுமத்ரா மற்றும் தெற்கு தாய்லாந்தின் பல பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியதுடன் 181 பேர் மரணத்திற்கும் காரணமானது.

இதனிடையே, Ditwah புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 410 பேர் மரணமடைந்துள்ளதுடன், 336 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |