பாடசாலை கட்டிட விபத்தில் இறப்பு எண்ணிக்கை 65 என அதிகரிப்பு
இந்தோனேசியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
150க்கும் மேற்பட்ட
கடந்த வாரம் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சடலங்களை மீட்டுள்ளனர்.
ஜாவா தீவில் உள்ள பல மாடி உண்டு உறைவிடப் பள்ளியின் ஒரு பகுதி, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதிய தொழுகைக்காகக் கூடியிருந்தபோது இடிந்து விழுந்தது. சுமார் அரை டசின் இளைஞர்களை இன்னும் காணவில்லை.
திங்கட்கிழமை மீட்புப் பணிகளை முடித்து, உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம் என்று நம்புவதாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்த இந்த விவகாரம் இந்த ஆண்டு இதுவரை நடந்த இந்தோனேசியாவின் மிக மோசமான பேரழிவாகும்.
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர், ஆனால் தரமற்ற கட்டுமானமே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கனரக உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு கடந்த வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன. விபத்து நடந்து 72 மணி நேரங்களுக்கு பிறகு, இனி உயிருடன் எவரும் மீட்கப்பட்ட வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்ததன் பின்னரே, கனரக உபகரணங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |