உச்சம் தொடும் இறப்பு எண்ணிக்கை... மூடி மறைக்கும் அதிகாரிகள்: வெளிச்சத்துக்கு வந்த உண்மை நிலவரம்
மெக்ஸிகோவில் கொரோனா இறப்பு எண்ணிக்கையானது அதிகாரிகள் வெளியிட்டதைவிட 60 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மெக்ஸிகோவில் இதுவரை கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 182,301 என்றே உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆண்டின் முதல் 6 வாரங்களில் மட்டும் கொரோனா தொடர்பில் 294,287 பேர்களின் இறப்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது மெக்ஸிகோ அரசு உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ள எண்ணிக்கையில் இருந்து 61.4 சதவீதம் அதிகமாகும். இதனிடையே, மெக்ஸிகோ அரசாங்கம் நீண்ட காலமாக அதன் உண்மையான கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை விட கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்று கூறி வந்துள்ளது.
மேலும், கொரோனா பரவலின் போது, இந்த ஆண்டின் முதல் 6 வாரங்களில் நாட்டில் மொத்த இறப்புகள் 417,002 ஆக இருந்தது என கண்டறியப்பட்டுள்ளது.
இது மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியதால், சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போதைய சூழலில் தங்களின் பிரதான விமான நிலையம் பாதுகாப்பாகவே உள்ளது என மெக்ஸிகோ அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த இறப்புகளின் எண்ணிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.