போரை நிறுத்தும் ஒப்பந்தம் என்பது அமெரிக்கத் தோல்வி குறித்த அறிவிப்பாகும்: ஈரான் அதிகாரி
அமெரிக்காவுடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தமானது, அந்த நாட்டின் தோல்விக்கான பிரகடனம் என்று ஈரான் புதன்கிழமையன்று குறிப்பிட்டுள்ளது.
ஒப்பந்தம் ஒரு வெற்றி
மத்திய கிழக்கு போரின்போது ஈரானால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகளில், அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலர் ரூபியோ தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய நிலையிலேயே ஈரான் இதை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட பெரும் தாக்குதல் நடவடிக்கைகளுடன் தொடங்கிய போர், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியதுடன் முடிவுக்கு வந்தது; இந்த ஒப்பந்தத்தை ஒரு வெற்றியாகச் சித்தரிக்க ஈரான் தலைவர்கள் முயன்றுள்ளனர்.
இஸ்ரேல் காரணமாக உருவான இந்த மோதல் மத்திய கிழக்கில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியும், அமெரிக்க ஆதரவு வளைகுடா அண்டை நாடுகள் மீது ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் ஏவியும் பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில், அமெரிக்காவும் ஈரானும் கடந்த வாரம் இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன; அத்துடன், நிரந்தரத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்முறையையும் தொடங்கின.
ஈரானின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான முகமது பாகர் காலிபாஃப் இந்த ஒப்பந்தம் குறித்து புதன்கிழமை தெரிவிக்கையில், இஸ்லாமாபாத்தின் உடன்படிக்கையானது அழுத்தம் மற்றும் நிர்ப்பந்தத்தின் விளைவாக ஏற்படவில்லை, மாறாக வீரமிக்க ஈரானிய தேசத்தின் எதிர்ப்பு மற்றும் அதிகாரத்தின் விளைவாகவே ஏற்பட்டது.
அமெரிக்கா அல்ல
அதனால்தான், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விப் பிரகடனமாக ஆனது என காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய கிழக்கின் பாதுகாப்பை அப்பிராந்திய நாடுகளே உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு முழுவதும் பல இராணுவத் தளங்களை அமெரிக்கா பராமரித்து வருகிறது; குறிப்பாக வளைகுடாப் பகுதியில், தனது நட்பு நாடுகளுக்கு உறுதியளிக்கும் முயற்சியாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் மார்கோ ரூபியோ புதன்கிழமையன்று அங்கு தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

இந்த நிலையில், ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் அதன் பதிலிப் படைகள் ஆகிய இரண்டு நீண்டகாலக் கவலைகளைப் பற்றிக் குறிப்பிடாத அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து வளைகுடாத் தலைவர்களுடன் விவாதிக்கத் தாம் விரும்புவதாக ரூபியோ கூறினார்.
ஆனால், ஏவுகணைத் திட்டம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் ஈரானுக்கு சாதகமான ஒரு முடிவையே அறிவித்திருந்தார். இஸ்ரேல் மட்டுமே, ஈரானின் ஏவுகணைத் திட்டம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |