விளாடிமிர் புடினின் அசையாத வலது கை..! தனித்துவமான நடைக்கு பின்னால் உள்ள மர்மம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நடக்கும் போது அவரது வலது கை குறைவான அசைவுகளை மட்டும் கொண்டிருப்பது ஏன் என்று புதிய விளக்கம் தெரியவந்துள்ளது.
புடினுக்கு பார்கின்சன் நோய் அல்ல
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனித்துவமான நடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
🚨⚡️ THE MYSTERY OF PUTIN'S WALK!
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) August 21, 2025
As a former KGB officer, he was trained to keep his right hand close to his gun, always ready.
His iconic walking style is PURE MUSCLE MEMORY from his INTELLIGENCE SERVICE days, every step radiating AUTHORITY and PRESENCE! 🇷🇺💥 pic.twitter.com/GEKd7YmthV
அதற்கு முக்கிய காரணம், புடின் நடக்கும் போது தன்னுடைய இடது கையை சாதாரணமாக அசைக்கும் அவர், வலது கையை பெரிதாக அசைப்பது இல்லை.
இந்த உடல் மொழியை ஆராய்ந்த சில வல்லுநர்கள், இது ரஷ்ய அதிபர் புடினுக்கு ஏற்பட்டுள்ள பார்கின்சன் நோயின் அறிகுறிகள் என்று யூகித்தனர்.
ஆனால் அதை மறுத்த மருத்துவர்கள், பார்கின்சன் நோயுக்கான வேறு எந்த அறிகுறிகளும் இல்லை என வாதிட்டனர்.
தனித்துவமான நடைக்கு பின்னால் உள்ள ரகசியம்!
புடினின் இந்த தனித்துவமான நடைக்கு பெயர் “கன்கிங்ஸ் வாக்கிங் ஸ்டைல்”(Gunsinger's gait') என கூறப்படுகிறது.
அதாவது இது ரஷ்ய உளவு அமைப்பான KGB பயிற்சியின் உடல் மொழி பழக்கமாகும்.
உளவாளிகளுக்கான சிறப்பு நடைப்பயிற்சி
விளாடிமிர் புடின் அரசியலுக்கு வருவதற்கு முன்பு 1975ம் ஆண்டில் சோவியத் யூனியனின் பாதுகாப்பு உளவு அமைப்பான KGB-யில் பணியாற்றினார்.
அங்கு ஆபத்தான சூழ்நிலைகளில் வேகமாக செயல்படுவதற்காக கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகளில் ஒன்று தான் இந்த “கன்கிங்ஸ் வாக்கிங் ஸ்டைல்” ஆகும்.
KGB பயிற்சி கையேடுகள் படி, திடீரென உருவாகும் ஆபத்தை எதிர்கொள்ள உளவாளிகள் உடனடியாக தங்கள் ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும். எனவே அவர்களது முதன்மையான வலது கையை பாக்கெட்டிற்கு அருகில் எப்போதும் வைத்துக் கொள்வார்கள், ஆனால் இடது கை இயல்பாக அசையும்.
இந்த பயிற்சி உளவாளிகள் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக KGB-யில் கற்றுக் கொடுக்கப்படும் நடைபயிற்சிகளில் ஒன்றாகும்.
எனவே புடினின் இந்த விசித்திரமான நடை அவரது மூத்த உளவு அதிகாரியாக பெற்ற பயிற்சியின் விளைவாக வந்தது ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |