வங்கக்கடலில் வலுவிழந்த புயல் சின்னம்.., இன்று எந்தெந்த பகுதிகளில் கனமழை?
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர -வடதமிழக கடலோர பகுதியில் நிலவியது.
அதன்பிறகு அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காலை தென்மேற்கு வங்கக்கடல்பகுதிகளிலும், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகேயும் நிலவியது.
மேற்கு - தென்மேற்கு திசையை நோக்கி நகரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் வலுவிழக்க உள்ளாதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், தென்மேற்கு, அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
இதனால் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், கடலோர ஆந்திர பிரதேசத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |