ட்ரம்பால் பல நாடுகள் மிரட்டப்படும் நிலையில்... குதிக்கும் ஆயுத உற்பத்தி நிறுவனப் பங்குகள்
பெரும்பாலான முதலீட்டாளர்கள் அரசியல் மற்றும் நிதி அதிர்ச்சிகளைச் சமாளித்துச் செல்வதற்குப் பழகிவிட்டனர்.
அபாயகரமான சூழ்நிலைகளில்
மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள்கூட, சமீப நாட்களில் நடந்தேறி வரும் மாபெரும் உலக நிகழ்வுகளைப் புறக்கணிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

வெனிசுலாவில் அதிரடியாகப் புகுந்து ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்தது. கிரீன்லாந்து மீது தொடர் மிரட்டல் விடுப்பது. ஈரான், கியூபா, மெக்சிகோ, கொலம்பியாவை அச்சுறுத்துவது என ட்ரம்பின் ஆட்டம் உலகளாவிய பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு பனாமா மற்றும் கனடா மீதும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த அபாயகரமான சூழ்நிலைகளில், நாம் உறுதியாக நம்பக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால், எதிரிகள் மற்றும் நேச நாடுகள் என இரு தரப்பினருக்கும் எதிராக ட்ரம்ப் மேற்கொள்ளும் அடாவடித்தனம், ஐரோப்பாவில் மீண்டும் ஆயுதமயமாக்கல் திட்டங்களைத் தூண்டிவிடும் என்பதே.
அமெரிக்க பாதுகாப்பு செலவினங்களை 50 சதவீதத்திற்கும் மேலாக, ஆண்டுக்கு 1.5 டிரில்லியன் டொலர்களாக உயர்த்துவதாக ட்ரம்ப் தாமே அறிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஆகியோர், ரஷ்யாவின் மீண்டும் ஒரு படையெடுப்பைத் தடுக்கும் நோக்கில், அமைதி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்குப் படைகளை அனுப்பத் தாங்கள் தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இன்னொருபுறம் ராணுவப் பயன்பாடுகளுக்குப் பயன்படக்கூடிய பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்ததால், ஆசியாவில் பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.

இந்த நெருக்கடியான சூழலில், பாதுகாப்புத் துறை சார்ந்த பங்குகள் இன்னும் கணிசமாக உயரும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இதனால் முதலீட்டாளர்கள் நம்பி முதலீடு செய்யக் கூடிய சில பங்குகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
முதலீட்டு வல்லுநர்களிடமிருந்து
இதன் அடிப்படையில், பிரித்தானியாவின் BAE Systems பங்குகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த நிறுவனம் வருடத்திற்கு சராசரியாக 64 சதவீத ஆதாயமடைந்துள்ளது.
இன்னொன்று ஜேர்மனியின் Rheinmetall நிறுவனம். முதலீட்டு வல்லுநர்களிடமிருந்து நல்ல விமர்சனங்கள் பெற்றுள்ள இன்னொரு நிறுவனம் Rolls-Royce. இது வருடத்திற்கு சராசரியாக 118 சதவீத ஆதாயமடைந்துள்ளது.
மட்டுமின்றி, கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000 சதவீதத்திற்கும் அதிகமான குறிப்பிடத்தக்க லாபத்தையும் ஈட்டியுள்ளது. Babcock நிறுவனம், பிரித்தானியா மற்றும் பிற நாடுகள் தங்கள் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டங்களை அதிகரிக்கும் நிலையில், தொடர்ந்து லாபம் ஈட்டுவதற்குச் சாதகமான நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

குழுமத்தின் மொத்த வருவாயில் சுமார் 62 சதவீதம் பிரித்தானியா பாதுகாப்புத் துறையிலிருந்து பெறப்படுகிறது. இன்னொன்று Chemring நிறுவனம். ஏவுகணைத் தாக்குதலில் இருந்து போர் விமானங்களைப் பாதுகாக்கும் அமைப்புகளை இந்த நிறுவனம் உருவாக்குகிறது.
நிபுணர்கள் பட்டியலிடும் இன்னொரு நிறுவனம் QinetiQ. ஐரோப்பாவில் Thales, Rheinmetall மற்றும் Airbus நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |