டெல்லியை வெளுத்து வாங்கும் கனமழை - 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல்!
டெல்லியில் தொடர் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியை வெளுத்து வாங்கும் கனமழை
கடந்த சில நாட்களாக டெல்லியில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பல பகுதிகளில் சாலையெங்கும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது, இதனால் வாகனங்கள் ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
தேசிய தலைநகர் மற்றும் நொய்டா மற்றும் காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. என்சிஆர் பகுதியில் மணிக்கு 40 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசியது.
இந்த கனமழையால் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக பல நகரங்களிலிருந்து டெல்லிக்கு வந்த 4 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Heavy rain, thunderstorms in parts of Delhi NCR#DelhiNCR | #Noida | #Delhi | #UttarPradesh | #DelhiRains https://t.co/AUXtwGNxv7 pic.twitter.com/WMlNhh0FGv
— DNA (@dna) May 27, 2023
Delhi woke up to heavy rain and gusty winds this morning. The rainfall impacted flights. A thunderstorm forecast was issued this morning for the national capital and nearby areas including Noida and Ghaziabad. The weather office had earlier predicted rain till Tuesday.… pic.twitter.com/futqGtBeYR
— Buziness Bytes (@BuzinessBytes) May 27, 2023