டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து- 6 பச்சிளம் குழந்தைகள் மரணம்
டெல்லியில் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் நடந்த தீ விபத்தில் ஆறு பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.
டெல்லி விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
#WATCH | Delhi: A massive fire broke out at a New Born Baby Care Hospital in Vivek Vihar
— ANI (@ANI) May 25, 2024
As per a Fire Officer, Fire was extinguished completely, 11-12 people were rescued and taken to hospital and further details are awaited.
(Video source - Fire Department) https://t.co/lHzou6KkHH pic.twitter.com/pE95ffjm9p
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர அத்வால் கூறுகையில், நேற்று நள்ளிரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக 16 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது.
காயமடைந்த 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 6 பேர் மரணமடைந்துள்ளனர், மற்றவர்கள் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் மருத்துவமனை மற்றும் அதன் அருகில் இருந்த குடியிருப்பு கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.