மாமனார், மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்தது ஏன்? மருமகளின் பகீர் வாக்குமூலம்
டெல்லியில் வயதான மாமனார், மாமியாரை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்த மருமகளை காவல்துறை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமனார், மாமியார் கொலை
டெல்லியில் உள்ள பாகீரதி விஹாரில் நேற்று இரட்டைக்கொலை நடைபெற்றதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. பொலிஸார் அங்கு சென்றபோது வயதான தம்பதியினர் இருவர் படுக்கை அறையில் கழுத்து அறுபட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளனர்.
@ndtv
இதனைத் தொடர்ந்து வயதான தம்பதியரைக் கொலை செய்து விட்டு மர்மநபர்கள் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்பட்டுள்ளனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் பாகீரதி விஹாரைச் சேர்ந்த ராதே ஷியாம் வர்மா(72), அவரது மனைவி வீணா(68) எனத் தெரிய வந்தது. கரோல்பாக்கில் உள்ள டெல்லி அரசுப்பள்ளியில் வர்மா துணை முதல்வராக பணியாற்றியவர்.
இந்த தம்பதியினரின் மகன் ரவி ரத்தன்(38) வீட்டின் மேல் தளத்தில் மனைவி (Monika Verma)மோனிகா வர்மாவுடன்(28) வசித்து வந்துள்ளனர். கீழ்த்தளத்தில் வர்மா தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
@ani
ரவிரத்தன் முஸ்தபாபாத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதன் பின் ஜோஹ்பூர் பகுதியில் ஆடை மற்றும் அழகுசாதன கடை நடத்தி வருவதாக தெரிகிறது.
திருமணத்தை மீறிய உறவு
முதற்கட்ட விசாரணையில், வர்மா வீட்டிலிருந்து 4.50 லட்ச ரூபாய் மற்றும் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. வீட்டின் பின்புற கதவு வழியாக மர்மநபர்கள் வந்து சென்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்பட்டுள்ளனர்.
அப்போது ரவிரத்தனின் மனைவி மோனிகா வர்மாவுக்கு இந்த இரட்டைக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் ரவிரத்தன் மனைவி மோனிகா வர்மாவிற்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது.
@ani
தனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக மாமனார், மாமியாரைக் கொலை செய்து விட்டு அவர்களது பணம், நகைகளோடு தப்பிச்செல்லலாம் என மோனிகா வர்மா திட்டமிட்டுள்ளார்.
இதனால் அவரது காதலன், அவரது நண்பர் இருவரும் மோனிகா வர்மாவின் ஏற்பாட்டின் பேரில் மொட்டை மாடியில் ஒளிந்து கொண்டுள்ளனர்.
இதன் பின் நள்ளிரவில் வர்மாவையும், அவரது மனைவியையும் கழுத்தை அறுத்துக்கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று கோகுல்புரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ரவிரத்தனின் மனைவி மோனிகா வர்மாவை காவல்துறை நேற்று நள்ளிரவு கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது காதலன், அவரது கூட்டாளியை பொலிஸார் தேடி வருகின்றனர்.