அமெரிக்காவில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விமானங்கள்: இணையத்தில் பரவும் வைரல் வீடியோ
அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானங்கள் மோதல்
புதன்கிழமை இரவு நியூயார்க்கில் உள்ள லாக்கார்டியா விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 விமானங்கள் ஓடுபாதையில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Breaking
— ⚡️🌎 World News 🌐⚡️ (@ferozwala) October 2, 2025
Two #Delta planes collided while taxiing at #NewYork’s LaGuardia Airport, causing one plane’s wing to detach.
The incident occurred as one aircraft was arriving from #Charlotte. At least one injury has been reported, with the extent of others unknown.#USA… pic.twitter.com/lrxajMcpWx
இந்த விபத்தில் டெல்டா விமானத்தின் மூக்கு மற்றும் மற்றொரு விமானத்தின் வலது இறக்கையில் மோதியுள்ளது.
இதில் விமானத்தின் இறக்கைகள் சேதமடைந்து இருப்பதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அத்துடன் விமானத்தின் முன் கண்ணாடி சேதமடைந்து இருப்பதாகவும் விமானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
டார்மாக்கில் இரவு 9:56 மணி அளவில் டாக்ஸிங்(Taxiing) செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த விமான மோதல் விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |