பிரித்தானிய பிரதமருக்கு இறுகும் நெருக்கடி... கோரிக்கை மனுவில் 640,000 பேர்கள் கையெழுத்து
பிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கை மனுவில் தற்போது 640,000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனடியாக பொதுத் தேர்தல்
இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க 100,000 என்ற வரம்பைத் தாண்டிவிட்ட நிலையில் பிரதமர் ஸ்டார்மருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
பொதுத்தேர்தல் என்ற கோரிக்கையை முன்வைப்பவர்கள், உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும். பெரும்பான்மையினருக்கு மாற்றம் தேவை என்று நாங்கள் நினைக்கிறோம், அதை விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவை ஆதரிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை 137,000 என இருந்த நிலையில், தற்போது 640,000 என அதிகரித்துள்ளது. Nicola Cree என்பவரே உடனடியாக பொதுத் தேர்தல் வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்களின் ஆதரவை நாடினார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தின் உத்தியோகப்பூர்வ இணைய பக்கத்தில் அதற்கான நகர்வை முன்னெடுத்தார். பிரதமர் ஸ்டார்மரின் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் 33.7 சதவீத வாக்குகள் பெற்று மொத்தம் 412 ஆசனங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |