புலம்பெயர்ந்தோர் வாழும் வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்: பிரெஞ்சுத் தீவில் பொலிசார் குவிப்பு
பிரெஞ்சுத் தீவு ஒன்றில், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புலம்பெயர்ந்தோர் வாழும் வீடுகளை இடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவரும் பிரெஞ்சுத் தீவு
பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான மயாட் (Mayotte), சமீப காலமாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவருகிறது.
மயோட் அதிகாரிகள், அங்கு வாழும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
Photograph: Philippe Lopez/AFP/Getty Images
இந்த தீவில் வாழும் புலம்பெயந்தோரில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாட்டவர்கள். மயாட் தீவு மக்கள், இந்த புலம்பெயர்ந்தோரால் தாங்கள் வறுமைக்கு ஆளாகிவருவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்
இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் வாழும் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான பொலிசாரும் துணை இராணுவத்தினரும் மயாட் தீவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வீடுகளுக்குள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, யாரும் இல்லை என்பதை உறுதி செய்தபின், மின்சாரமும் தண்ணீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டபின், வீடுகளை இடிக்கும் பணி துவங்கியுள்ளது.
Photograph: Gregoire Merot/AP
இந்த நடவடிக்கை காரணமாக ஏற்கனவே அங்கு வாழும் இளைஞர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.