மனிதர்களை அச்சுறுத்தும் பேய்கள்.. இந்த காட்டுக்குள் சென்றவர்கள் யாரும் உயிரோட திரும்பி வந்ததில்லை!
ஜப்பானில் உள்ள காடு ஒன்றிற்கு செல்லும் மக்கள் உயிரோடு திரும்பி வருவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளது. அந்த வகையில் ஜப்பானில் அகிகஹாரா தற்கொலைக் காடு ஒன்றுள்ளது. இதுவரை அந்த காட்டிற்கு சென்றவர்கள் திரும்பி வந்ததில்லை போன்ற அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கு வரும் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதாக இந்த வனத்தைப் சுற்றி உள்ள மக்கள் கூறுகின்றனர். இதனால் இந்த காடு தற்கொலை காடு என அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்டில் பேய்கள் இருப்பதாக ஜப்பான் மக்கள் நம்புகிறார்கள். அதே பேய்கள் மக்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன. இந்த அடர்ந்த காட்டில் ஒரு முறை தொலைந்து போனால் இங்கிருந்து வெளியே வரமுடியாது.
2003 முதல் இந்த காட்டில் 105 க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அதிகாரபூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த காடு பற்றிய தகவல்கள் யாவும் இன்று வரை மர்ம முடிச்சாகவே இருந்து வருகின்றது.