அடிமையாய் வாழ்வதை விட மரணமே மேல்... அப்கானிஸ்தானில் போராட்டத்தில் குதித்த பெண்கள்!
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளுக்காக பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஹெராட் மாகாண ஆளுநர் வளாகத்திற்கு வெளியே பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
மேலும், வேலை, கல்வி மற்றும் சுதந்திரத்தில் பெண்களுக்கான உரிமையை கோரியும் அவர்கள் கோஷமிட்டனர்.
வீட்டில் அடங்கி அடிமையாய் வாழ்வதை விட மரணமே மேல் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கூறினார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளில் பெண்கள் அடைந்த சாதனைகள் மற்றும் உரிமைகளை இழந்துவிடக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
دهها تن از زنان هراتی برای حمایت از حقوق زنان و دختران هرات و سراسر افغانستان، در مقابل ساختمان ولایت تظاهرات کردند.
— افغانستان اینترنشنال - خبر فوری (@afintlbrk) September 2, 2021
آنها شعار میدادند "نترسید، نترسید، ما همه با هم هستیم" و همچین در شعارهای دیگری، خواهان حق کار، آموزش و آزادی شدند.
... pic.twitter.com/bkTS3Cevel
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு நாட்டில் உள்ள பெண்கள் குறிப்பாக வேலைக்கு செல்பவர்களின் நிலை குறித்த பெரியளவில் கவலை எழுந்தது.
ஆனால், நாங்கள் மாறிவிட்டோம், ஷரியா சட்டத்தின் கீழ் நாட்டில் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும், நிலைமை சரியானதும் பெண்கள் பணிக்கு திரும்பலாம் என தலிபான்கள் உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.