பிரித்தானியாவில் பரவத் துவங்கும் டெங்கு காய்ச்சல்: மற்றொரு நாட்டிற்கு சென்றதால் தொற்றியதாக பரவும் செய்தி
பிரித்தானியாவில் டெங்கு காய்ச்சல் பரவத் துவங்கியுள்ள நிலையில், பிரான்சுக்கு சுற்றுலா சென்றதால் டெங்கு தொற்றியதாக பிரித்தானியாவில் செய்திகள் பரவத் துவங்கியுள்ளன.
பிரான்சில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பரவிய டெங்கு
பிரித்தானியாவில் டெங்கு பரவத் துவங்கியுள்ள நிலையில், 44 வயதுடைய பிரித்தானியப் பெண் ஒருவர் பிரான்சிலுள்ள Nice நகருக்கு அருகில் வாழும் தனது குடும்பத்தினரை சந்திக்கச் சென்றதாகவும், அங்கிருந்துதான் அவருக்கு டெங்கு தொற்றியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அத்துடன், அவர் வேறெந்த நாட்டுக்கும் செல்லவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.
Image: Getty Images/iStockphoto
அந்த குறிப்பிட்ட பகுதியில், உள்ளூர் மட்டத்தில் சுமார் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியிருந்ததாகவும், அதில் ஒருவர் இந்த பிரித்தானியப் பெண் என்றும் கூறுகிறார் இது குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள பிரித்தானிய ஆய்வாளரான Dr Owain Donnelly.
பருவநிலை மாற்றம், குறிப்பாக அதீத வெப்பம், அதிக மழை, சுற்றுலா போன்ற விடயங்களால் ஐரோப்பாவில் டெங்கு பரவல் அதிகரிப்பதாக தெரிவிக்கும் Dr Owain, பொதுவாக, ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருபவர்கள்தான் பிரித்தானியாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறார்.