பயணிகளுடன் தரைதட்டி நிற்கும் சொகுசு கப்பல்: தொற்று பரவும் அச்சத்தில் பயணிகள்
டென்மார்க் நாட்டின் ஓஷன் எக்ஸ்ப்லோரர் என்ற சொகுசு கப்பல் அல்பெஃப்ஜோர்ட் என்னும் இடத்தில் தரைதட்டி நின்றதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தரைதட்டி நின்ற சொகுசு கப்பல்
டென்மார்க் நாட்டின் சன்ஸ்டோன் குழுவிற்கு சொந்தமான ஓஷன் எக்ஸ்ப்லோரர் என்ற சொகுசு கப்பல் 3 நாட்களுக்கு முன்பு கிரீன்லேண்டு நாட்டின் வடகிழக்கு கடல் பகுதியில் உள்ள அல்பெஃப்ஜோர்ட் என்னும் இடத்தில் தரைதட்டி நின்றதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
205 பயணிகளுடன் 3 வார பயண திட்டத்துடன் கிரீன்லேண்டு நாட்டை நோக்கி செப்டம்பர் 1ம் திகதி புறப்பட்ட ஓஷன் எக்ஸ்ப்லோரர் சொகுசு கப்பல் வருகின்ற செப்டம்பர் 22ம் திகதி பயணத்தை நிறை செய்துவிட்டு திரும்ப இருந்தது.
ஆனால் 3 நாட்களுக்கு முன்பு கிரீன்லேண்டு நாட்டின் வடகிழக்கு கடல் பகுதியில் உள்ள அல்பெஃப்ஜோர்ட் என்னும் ஓஷன் எக்ஸ்ப்லோரர் என்ற சொகுசு கப்பல் தரைதட்டி நின்றது. சொகுசு கப்பலை மீட்கும் முயற்சியில் நுட் ராஸ்முசென் என்னும் கப்பல் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
உலகின் அதிக மக்கள் வசிக்காத பகுதிகளில் ஓஷன் எக்ஸ்ப்லோரர் கப்பல் இயக்கப்படுகிறது, இதில் பயணம் செய்வதற்கு சுமார் 30 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பயணிகள் அதிர்ச்சி
தரைதட்டி நிற்கும் சொகுசு கப்பலில் பல வயதான பயணிகள் இருப்பதுடன் அதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதால் பயணிகள் பெரும்பாலானோர் கவலையில் மூழ்கியுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக கப்பலில் மருத்துவர் ஒருவர் இருப்பதால் பயணிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |