கொரோனாவை ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்காத ஐரோப்பிய நாடு! அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்..
கொரோனா தொற்றெல்லாம் எங்களுக்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தலே கிடையாது என கூறி, பிரபல ஐரோப்பிய நாடான டென்மார்க் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது.
BA.1 என அறியப்படும் கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய Omicron மாறுபாடு, இப்போது உலகளவில் கிட்டத்தட்ட அனைத்து கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கும் காரணமாக இருக்கிறது.
ஆனால், Omicron-க்கு மிக நெருங்கிய உறவினர் என கூறப்படும், அதனை ஒத்த மாறுபாடான BA.2 அதிக அளவில் பரவிவருவது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த BA.2 வகை கொரோனா வைரஸால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Omicron துணை மாறுபாடான BA.2 வகை வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், டென்மார்க் அரசு அந்நாட்டிலுள்ள அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய முதல் நாடாக டென்மார்க் ஆனது.
டென்மார்க்கில் ஒரு நாளைக்கு சுமார் 40,000 முதல் 50,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இது அந்நாட்டின் 5.8 மில்லியன் மக்கள் தொகையில் 1 சதவீதம் கூட இல்லை என்பதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், டேனிஷ் அரசாங்கத்தின் உயர் தடுப்பூசி விகிதத்தைக் கருத்தில் கொண்ட பிறகு இந்த முடிவை எடுத்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த வைரஸ் இனி "முக்கியமான அச்சுறுத்தலாக" தகுதி பெறாது என்று அந்நாட்டு நிபுணர்கள் கூறியிள்ளனர்.
டென்மார்க்கில் இன்று முதல் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது.
அந்நாட்டில் தற்போதைய கோவிட் விதிமுறைகளின் கீழ், டேனிஷ் சுகாதார ஆணையம் நேர்மறை சோதனை செய்பவர்களை நான்கு நாட்களுக்கு தனிமைப்படுத்த பரிந்துரைக்கிறது, அதே நேரத்தில் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.
டேனிஷ் பிரதம மந்திரி Mette Frederiksen இந்த நடவடிக்கையை வரவேற்று, "முழுமையான டென்மார்க்கிற்கு காலை வணக்கம்" என்று பேஸ்புக்கில் எழுதி, தடுப்பூசி போட்டதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
டென்மார்க்கைத் தவிர, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளும் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.