ரஷ்யாவுக்கு எதிராக ஒன்று கூடுகிறதா மேற்கத்திய நாடுகள்? உக்ரைனில் குவியும் ஆயுதங்கள்
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கி இருப்பதாக டென்மார்க் அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் பதற்றம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மீண்டும் உச்சக்கட்ட பதற்ற நிலையை அடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தங்களது ஏவுகணைகளை ரஷ்யா பிராந்தியத்திற்குள் பயன்படுத்த அனுமதி அளித்ததை அடுத்து மூன்றாம் உலகப் போர் தொடங்குவதற்கான பதற்றம் அதிகரித்துள்ளது.
The U.S. has officially allowed Ukraine to strike Russia with long-range weapons
— NEXTA (@nexta_tv) November 19, 2024
"If we're lucky, this step will make the Russian Federation realize that its actions are futile and prompt it to either start peace negotiations or withdraw troops from Ukraine," said U.S. Deputy… pic.twitter.com/ANwtBRmpDf
உக்ரைனும் அமெரிக்க ஆயுதங்களை கொண்டு ரஷ்யாவுக்குள் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது, அதே சமயம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அதிரடியாக அணு ஆயுத பயன்பாட்டு கொள்கையில் புதிய மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கிடையில் ஜேர்மனி உக்ரைனுக்கு AI ட்ரோன்களை வழங்கியுள்ளது.
❗️ Denmark has handed over six F-16 fighter jets to Ukraine, with 13 more expected to be handed over later - Prime Minister Mette Frederiksen pic.twitter.com/q71gxyU6BD
— NEXTA (@nexta_tv) November 19, 2024
போர் விமானங்கள்
இந்நிலையில் டென்மார்க் உக்ரைனுக்கு ஆறு F-16 ரக போர் ஜெட் விமானங்களை வழங்கியுள்ளது. இன்னும் 13 F-16 ரக போர் ஜெட் விமானங்கள் விரைவில் உக்ரைனிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நிலைமைகள் கவலைக்குரிய நிலையை அடைந்துள்ள நிலையில் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு Strom Shadow ஏவுகணைகளை பிரித்தானியா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING:
— Globe Eye News (@GlobeEyeNews) November 19, 2024
United Kingdom is expected to supply Ukraine with Storm Shadow missiles for strikes inside Russia. pic.twitter.com/FYmDA1JoTU
ரஷ்ய போருக்காக கிட்டத்தட்ட 50,000 உக்ரைனிய வீரர்கள் பிரித்தானியாவில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர் என்று பிரித்தானிய அரசின் செய்தி சேவைகள் தெரிவித்துள்ளது.
அத்துடன் உக்ரைனுக்கான தாக்குதல் மற்றும் உளவு ட்ரோன்களுக்காக $9.5 மில்லியன் தொகையை ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.