15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை - திட்டத்தில் ஐரோப்பிய நாடு
முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வயது வேறுபாடு இன்றி அனைவரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
சிறுவர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதாக உலகளவில் கவலை எழுந்துள்ளது.
15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடை
இந்நிலையில், ஐரோப்பிய நாடான டென்மார்க் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து பேசிய டென்மார்க் பிரதமர் Mette Frederiksen, "செல்போன்களும், சமூக ஊடகங்களும் நமது குழந்தைகளின் குழந்தைபருவத்தை வீணாக்குகின்றன" என தெரிவித்தார்.
எந்த சமூக ஊடகங்கள் தடை விதிக்கப்படும், இந்த மசோதா சட்டமாக மாறினால், எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை.
அதேவேளையில், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெற்றோர்களின் உரிய அனுமதியுடன் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
டென்மார்க்கில் நடத்திய ஆய்வு ஒன்றில், 11 முதல் 19 வயதுள்ள 60% பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் வீட்டிலே முடங்கி கிடப்பதாக தெரிய வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூகஊடகங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை வரும் டிசம்பர் மாதம் முதல் அமுலுக்கு வர உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |