இனி முகக் கவசம்.. சமூக இடைவெளி தேவையில்லை! உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த பிரபல நாடு
கொரோனாவின் அடுத்த அலையை எப்படி சமாளிக்க போகிறோம் என பல நாடுகள் பயத்தில் உள்ள நிலையில், பிரபல ஐரோப்பிய நாடான டென்மார்க் முகக் கவச கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
இயல்பு நிலைக்கு திரும்ப முகக் கவச கட்டுப்பாடுகளை நீக்குவதாக டென்மார்க் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தில் முகக் கவசம் அணிய தேவையில்லை என அரசு டென்மார்க் அரசு அறிவித்துள்ளது
அதாவது, சனிக்கிழமை முதல் பேருந்துகள், ரயில்கள் மற்றும் மெட்ரோ என பொது போக்குவரத்தில் முகக் கவசம் அணிய தேவையில்லை என நாட்டின் போக்குவரத்து அமைச்சர் Benny Engelbrecht அறிவித்தார்.
இந்த மாற்றம் முதலில் செப்டம்பர் 1ம் திகதி முதல் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் அரசாங்கம் தற்போதே கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
மேலும், புதன்கிழமை முதல் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், சர்வதேச விமான போக்குவரத்து விதிகள் பொருந்தும், விமானங்கள் மற்றும் நாட்டின் விமான நிலையங்களில் முகக் கவசம் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.