கொரோனா கட்டுப்பாடுகளை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வரும் பிரபல ஐரோப்பிய நாடு!
பிரபல ஐரோப்பிய நாடான டென்மார்க், அமுலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அறிவிப்பை நாளை நாட்டின் பிரதமர் Mette Frederiksen வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி மாதம் தொடக்கம் முதல் நாட்டில் அமுலில் உள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வரும் என பிரதமர் நாளை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டென்மார்க்கில் கிறிஸ்மஸை முன்னிட்டு ஒரு மாத காலம் விதிக்கப்பட்ட ஊரடங்கு இந்த மாத தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.
எனினும், கட்டாய முகக்கவசம், உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே திறந்திருக்க வேண்டும் உட்பட கட்டுப்பாடுகளில் தொடர்ந்து அமுலில் இருந்தன.
இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாதம் தொடக்கம் முதல் முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை டென்மார்க்கில் புதிதாக 40,348 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.