உக்ரைனால் டீசல் பிரச்சனையை சந்திக்கும் ரஷ்யா? விளக்கமளித்த துணைப் பிரதமர்
ரஷ்யாவில் உள்நாட்டு எரிபொருள் சந்தையின் நிலைமை சவாலானது; ஆனால் கட்டுப்பாட்டில் உள்ளது என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
உக்ரைனின் தாக்குதல்களையடுத்து டீசல் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிப்பது குறித்து ரஷ்ய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
அதிகரித்து வரும் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுகளுக்கு இடையே, உள்நாட்டு எரிபொருள் சந்தையை நிலைப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்ஸாண்டர் நோவாக் (Alexander Novak) இதுகுறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "உள்நாட்டு சந்தையின் நிலைமை சவாலானது; ஆனால் கட்டுப்பாட்டில் உள்ளது. பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருள் ஏற்றுமதி மீதான தற்போதைய கட்டுப்பாடுகளுடன், டீசல் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிப்பது குறித்தும் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும் நாங்கள் முழுத் திறனை எட்டியுள்ளோம். பழுதுபார்க்கும் காலக்கெடுவைக் குறைத்துள்ளோம். மேலும், திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளை பிற்கால திகதிகளுக்கு ஒத்திவைத்துள்ளோம்" என்றார்.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பின்போது அவர் இதனைக் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |