1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்ட பொல்லார்ட் அணி
சர்வதேச லீக் டி20 போட்டியில் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் MI எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது.
மேக்ஸ் ஹோல்டன் 42 ஓட்டங்கள்
அபுதாபியில் நடந்த ILT20 போட்டியில் MI எமிரேட்ஸ் மற்றும் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய டெஸெர்ட் வைப்பர்ஸ் (Desert Vipers) அணியில் மேக்ஸ் ஹோல்டன் 42 (37) ஓட்டங்களும், பஹர் ஜமான் 35 (31) ஓட்டங்களும் எடுத்தனர்.
ஹெட்மையர் 9 பந்துகளில் 15 ஓட்டங்களும், டேன் லாரன்ஸ் 8 பந்துகளில் 15 ஓட்டங்களும் விளாச டெஸெர்ட் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.
போராடிய ரஷீத் கான்
பின்னர் களமிறங்கிய MI எமிரேட்ஸ் அணியில் பேர்ஸ்டோவ் 8 ஓட்டங்களிலும், வசீம் 24 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, டாம் பேன்டன் 34 ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 31 (29) ஓட்டங்களும், அணித்தலைவர் கிரோன் பொல்லார்ட் (Kieron Pollard) 13 பந்துகளில் 23 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். கடைசி ஓவரில் MI எமிரேட்ஸின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்தில் இருந்த ரஷீத் கான் (Rashid Khan) சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டினார்.
காசன்பர் கடைசி பந்தில் ரன் அவுட் ஆக, MI எமிரேட்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. டேவிட் பெயின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |