பிரித்தானியா அல்லது அமெரிக்கா... ரஷ்ய வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த பாதுகாப்பு அமைச்சகம்
மேற்கத்திய நாடுகள் தயாரித்த ராணுவ டாங்கிகளை அழிக்கும் ரஷ்ய வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
ரஷ்ய வீரர்களுக்கு ஊக்கத்தொகை
நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு அளித்துள்ள ஆயுதம் தாங்கும் வாகனங்கள் அல்லது ஜேர்மன் தயாரிப்பான Leopard டாங்கிகளை அழித்தால் ரஷ்ய வீரர்களுக்கு 930 பவுண்டுகள் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
@epa
உக்ரைன் துவங்கியுள்ள எதிர் தாக்குதல் நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களை அழித்ததாக கூறி ரஷ்ய வீரர் ஒருவருக்கு பதக்கம் அளிக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மட்டுமின்றி, இந்த ஊக்கத்தொகை அளிப்பது என்பது, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நாளில் இருந்தே அமுலில் இருக்கும் திட்டம் எனவும், இதுவரை 10,000 வீரர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
16,001 ராணுவ தளவாடங்கள் அழிப்பு
தற்போது ஜேர்மன் தயாரிப்பான Leopard டாங்கிகளை அழித்ததாக கூறி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துள்ள ராணுவ ஆயுத வாகனங்களை அழித்ததற்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
@AP
மே 31ம் திகதி வரையில் மொத்தம் 16,001 ராணுவ தளவாடங்களை அழித்ததாக கூறி 10,257 ரஷ்ய வீரர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். மார்ச் மாதம் ரஷ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனில் கைப்பற்றப்படும் ஒவ்வொரு கிலோமீற்றர் நிலத்திற்கும் 530 பவுண்டுகள் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக ராணுவத்தில் இணைந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் 3,100 பவுண்டுகள் ஊக்கத்தொகை அளிக்கப்படும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாத ஊதியமாக 2,000 பவுண்டுகள், தீவிரமாக செயல்படும் வீரர்களுக்கு நாள்தோறும் 80 பவுண்டுகள் ஊக்கத்தொகை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |